Home சினிமா ஏ.ஆர்.ரஹ்மான் நட்பானவர் இல்லை.. பிரபல பாடகர் சொன்ன குற்றச்சாட்டு

ஏ.ஆர்.ரஹ்மான் நட்பானவர் இல்லை.. பிரபல பாடகர் சொன்ன குற்றச்சாட்டு

0

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், ஹிந்தி மட்டுமின்றி வெளிநாட்டு படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார். ஆஸ்கார் விருது வென்று உலக அளவிலும் அவர் பிரபலமான இசையமைப்பாளர் தான்.

இருப்பினும் அவரை பற்றி ஒரு குற்றச்சாட்டை பிரபல பாடகர் தற்போது கூறி இருக்கிறார். அது என்ன என பார்க்கலாம்.

சோனு நிகாம்

பிரபல பாடகர் சோனு நிகாம் சமீபத்திய பேட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பேசி இருக்கிறார்.

“அவர் யாரையும் தன்னிடம் நெருங்கி பழக விடமாட்டார். மற்றவர்கள் பற்றி பேச மாட்டார். அடுத்தவர் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என தெரிந்துகொள்ளளவும் விரும்ப மாட்டார். அவர் யாருடனும் நட்பாக இல்லை. எப்போதும் வேலையை மட்டும் தான் பார்ப்பார்” என கூறி இருக்கிறார் சோனு நிகாம்.

அவரது பழைய நண்பர்கள், திலீப் ஆக அவரை தெரிந்தவர்களிடம் மட்டும் ஏ.ஆர்.ரஹ்மான் open up ஆகிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version