Home சினிமா அந்த பெண் அங்கே எதற்கு போனார்? என கேட்பவர்கள்.. பிக் பாஸ் அர்ச்சனா போட்ட பதிவு

அந்த பெண் அங்கே எதற்கு போனார்? என கேட்பவர்கள்.. பிக் பாஸ் அர்ச்சனா போட்ட பதிவு

0

கோவையில் கல்லூரி மாணவி நண்பர் உடன் பேசிக்கொண்டு இருந்தபோது 3 பேரால் கூட்டு வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பற்றி பிரபலங்கள் பலரும் கோபமான கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸ் புகழ் அர்ச்சனா ரவிச்சந்திரன் தற்போது கோபமாக ட்விட்டரில் இது பற்றி பதிவிட்டு இருக்கிறார்.

பெண்கள் பொம்மை இல்லை.பெண்கள் சுமை அல்ல. பெண்களை பாதுகாக்க முடியாத சமூகம், அதை சமூகம் என்றே சொல்லிக்கொள்ள கூடாது.

“பெண்ணை இழுத்து சென்று வன்கொடுமை செய்திருக்கிறார்கள். ஆனாலும் மக்கள் கேட்கும் முதல் கேள்வி, ‘அந்த பெண் அங்கே எதற்கு போனார்?’.

ஏன் வன்கொடுமை செய்தார்கள், கொலை வழக்கில் கைதானவர்கள் ஏன் வெளியில் வந்தார்கள் என யாரும் கேட்கவில்லை.

பெண்ணுக்கு உரிமை இல்லையா?

பெண்கள் என்றால் வீட்டில் இருக்க வேண்டும், டீசென்ட் ஆக உடை அணிய வேண்டும், சீக்கிரம் வீட்டுக்கு வர வேண்டும், தலை குனிந்து இருக்க வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும். யாரிடம் இருந்து? இதே ஆண்களிடம் இருந்து தான்.

எப்போதும் பெண் மீது தான் தவறு. அவள் நேரம், அவள் உடை, அவள் தேர்வுகள், அவள் வாழ்க்கை. அவனது குற்றம் தவிர எல்லாமே தவறு.

உரிமை பற்றி யாரும் பேசாதீர்கள். தற்போது இந்த நாட்டில் அடிப்படை உரிமைகள் பெண்களுக்கு இல்லை. பாதுகாப்பு இல்லை. கண்ணியம் இல்லை. வாழ கூட உரிமை இல்லை.

இவ்வாறு அர்ச்சனா கோபமாக பதிவிட்டு இருக்கிறார். 

 

NO COMMENTS

Exit mobile version