Home இலங்கை சமூகம் அர்ச்சுனா எம்.பியின் சரமாரி தாக்குதல்: வெளியாகியது சிசிரிவி காட்சி!

அர்ச்சுனா எம்.பியின் சரமாரி தாக்குதல்: வெளியாகியது சிசிரிவி காட்சி!

0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகள் தற்போது வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று (11) நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனது தொலைப்பேசியில் ஒரு காணொளியை படம்பிடித்துக் கொண்டிருந்தபோது, ​​அதை எதிர்த்த இரண்டு நபர்களால் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து, குறித்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதாக தெரிவிக்கப்பட்டது.

கைகலப்பு

இந்த நிலையில், சம்பவத்தில் ​​நாடாளுமன்ற உறுப்பினரும் தாக்கப்பட்டதாகக் கூறி வைத்தியசாலையில் அனுப்பட்டதாகவும் காயமடைந்த மற்றொரு நபரும் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

அத்தோடு, தாக்குதலுக்கு முன்னரான சம்பவ இடத்தில் நடந்த வாக்குவாதம் குறித்த காணொளியை அர்ச்சுனா தனது சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்டிருந்ததொடு அதற்கு பின்னர் நடந்த சம்பவங்கள் அதில் பதிவாகியிருக்கவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில், அந்த தாக்குதல் தொடர்பான சிசிரிவி காட்சிகள் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளதோடு, அதில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவால் நபர் ஒருவர் சரமாரியாக தாக்கப்படும் சம்பவமும் பதிவாகியுள்ளது.  

https://www.youtube.com/embed/yFjgJ7wD8Z0

NO COMMENTS

Exit mobile version