Home இலங்கை அரசியல் எதிரணியில் இணையும் அர்ச்சுனா மற்றும் கஜேந்திரகுமார்

எதிரணியில் இணையும் அர்ச்சுனா மற்றும் கஜேந்திரகுமார்

0

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது எதிரணியில் இணைவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தீர்மானித்துள்ளது.

குறித்த விடயத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar ponnambalam) தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்திற்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் இதன் போது தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் ஆர்ப்பாட்ட பேரணி

இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகளின் பேரணியில் பங்கேற்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version