நாடாளுமன்றில் இன்றையதினமும் தனக்கு உரையாற்றுவதற்கான நேரம் ஒதுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
“நான் சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர், நேற்றையதினம் குறித்த விடயத் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக குழுவொன்றை நியமிப்பதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றில் வெறுமனே இருந்து விட்டு, மீண்டும் யாழ்ப்பாணம் செல்ல வேண்டியுள்ளது, இந்த விடயம் குறித்து துரிதமான கவனம் செலுத்தப்பட வேண்டும்.
எனக்கு இது தொடர்பான பதிலை தாருங்கள், ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றில் எனது சிறப்புரிமையை இழந்துள்ளேன்.” என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மேலும் தெரிவித்தார்.
https://www.youtube.com/embed/8y0OQgEfbV8