சமயங்களுக்கு இடையில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலான அர்ச்சுனா எம்.பி. யின் கருத்து கண்டிக்கத்தக்க விடயம் என சர்வதேச இந்து மத பீடம்
தெரிவித்துள்ளது.
சர்வதேச இந்து மத பீடம் வெளியிட்டுள்ள கண்டன செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், சமூக ஊடகங்கள் ஊடக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஒரு வீடியோ பதிவு மூலம் கண்டிக்கத்தக்க செய்தியைத் தெரிவித்துள்ளார்.
கோட்டையை இடிப்பர்களா
குறிப்பாக நல்லூர் ஆலயம் முன்னர் ஒரு காலத்தில் அந்த முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலயம் இருக்கும் இடத்தில் தான் இருந்தது. எனவே அதனை உடைப்பார்களா என்ற தொனியில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்து இந்து மதத்தவர்களுக்கும் கிறிஸ்தவ மத்ததவர்களுக்கும்
இடையே மதக் கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதா என்ற கேள்வி
எழுப்பும் வகையில் அவரது உள்ளது.
அங்கிருந்த நல்லூர் ஆலயம் இடிக்கப்பட்டு கோட்டை கட்டப்பட்டது. ஆகவே
கோட்டையை இடிப்பர்களா என்ற வினாவும் தொடுத்துள்ளார்.
மத கலவரத்தை தூண்டும்
இந்த நிலைமை இருக்கும் போது, தையிட்டி விகரையை உடைக்க சொல்வது
சரிதானா என்ற பாணியில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இவரது கருத்து மூலம் இவரது உள்நோக்கம் தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு
தெரிவிப்பது அனாவசியம் என்பதையே காட்டுகிறது.
இதனால் தையிட்டி விகாரை அமைவிடத்துக்கு மறைமுகமாக ஆதரவையும்
அர்ச்சுனா தெரிவிக்கிறார் என்பதை தமிழ் மக்கள் உணராமல் இல்லை.
எனவே மத கலவரத்தை தூண்டும் வண்ணம் இந்த காணொளி அமைந்திருக்கின்ற நிலையில் சர்வதேச இந்துமதபீடம் பெரும் கவலை கொண்டுள்ளது.
அவரது கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம் என்றுள்ளது.
