Home இலங்கை அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ள அர்ச்சுனா எம்.பியின் அறிக்கை: ஹிஸ்புல்லாஹ் ஆவேசம்

சர்ச்சையை கிளப்பியுள்ள அர்ச்சுனா எம்.பியின் அறிக்கை: ஹிஸ்புல்லாஹ் ஆவேசம்

0

நாடாளுமன்றில் தனக்கு இருக்கின்ற உரிமையை பயன்படுத்தி ஒரு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் ஒரு மார்க்கத்திற்கு எதிராகவும் பேசுபவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.

அத்தோடு, முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் குறித்த விடயங்களானது, காலத்திற்கு காலம் பேசப்படுபவை என்றும், அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே அமைச்சுக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால், முஸ்லிம் கலாச்சார திணைக்களம், ஜம்மியதுல் உலமா, கல்வி அமைச்சு, நீதி அமைச்சு ஆகியவை இணைந்து செய்ய வேண்டும் என்றும் ஹிஸ்புல்லாஹ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதைவிடுத்து, நாடாளுமன்றில் முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசிவிட்டு, அது சார்பில் அவர்களிடத்திலேயே விளக்கங்களை கேட்டு, மிகவும் மோசமாகவும் கேவலமாகவும் அறிக்கைகளை வெளியிடுவது தமிழ் மக்கள் இடத்திலும் முஸ்லிம் மக்கள் இடத்திலும் பாரிய பிளவை ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார். 

You may like this,

https://www.youtube.com/embed/oGV-p62oA2Mhttps://www.youtube.com/embed/5ejiDCTDuBs

NO COMMENTS

Exit mobile version