கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினை தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் தனது தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்க இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த விடயத்தின் போது அரசாங்கம் சார்ந்த கருத்துக்களை இந்திய அரசிடம் தான் முன்வைக்கப்போவதில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
அத்துடன், கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினை குறித்து தேசிய அரசாங்கம் திடமான தீர்மானமொன்றை எடுக்குமென்ற நம்பிக்கை இருப்பதாகவும் இராமநாதன் அர்ச்சுனா மேலும் தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/embed/e8iDsK6OFHo