Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற ஆசனத்தை கைப்பற்றிய அர்ச்சுனா – பெரும் அதிர்ச்சியில் தமிழ் கட்சிகள்

நாடாளுமன்ற ஆசனத்தை கைப்பற்றிய அர்ச்சுனா – பெரும் அதிர்ச்சியில் தமிழ் கட்சிகள்

0

புதிய இணைப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுயேட்சைக் குழு 17 ஊசி சின்னத்தில் போட்டியிட்ட வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன்  20,487 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயேட்சைக் குழு 17 இல் போட்டியிட்ட வைத்தியர் அர்ச்சுனா அணி 27,855 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தைப் பெற்றுள்ளார்.

முதலாம் இணைப்பு

இலங்கையில் ஏற்பட்ட அநுர அலை தென்னிலங்கை அரசியல் மட்டுமன்றி தமிழர் தேசிய கட்டமைப்பையும் தகர்த்துள்ளது.

தற்போது வெளியாகிய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு அமைய வட மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தி  மூன்று ஆசனங்களை கைப்பற்றி உள்ளது

தமிழர் தாயகத்தில் பாரம்பரிய தமிழ்கட்சி பிளவுபட்டு பல பிரிவுகளாக களமிறங்கி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

பெரும் பேசுபொருளாக வைத்தியர்

மாறாக கடந்த சில மாதங்களாக பெரும் பேசுபொருளாக இருந்த வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் மீதான மக்களின் ஆதரவு தமிழ் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறுகிய காலத்தில் பிரபலமான வைத்தியர் தற்போது வெளியான இறுதி முடிவிற்கமைய ஒரு ஆசனத்தை பெற்றுள்ளதுடன் நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version