Home இலங்கை அரசியல் கடுமையாக கூச்சலிட்ட அர்ச்சுனா எம்.பி! சபையில் அமளி துமளி

கடுமையாக கூச்சலிட்ட அர்ச்சுனா எம்.பி! சபையில் அமளி துமளி

0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது ஆற்றிய உரை சபைக்குள் கடுமையான குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது.  

அவர் பேசிய வார்த்தைகள் சில, நாடாளுமன்றம், இலங்கை பொலிஸார் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டவர்களை கடுமையாக அவமதிக்கும் வகையில் இருந்ததாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.  

இதன்போது, எதிர்க்கட்சி மற்றும்  ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அர்ச்சுனாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “உங்கள் அனைவருக்கும் என்னைப் பார்த்தால் பயம்” என்று அர்ச்சுனா எம்.பி சபையில் கடுமையாக கூச்சலிட்டார். 

மேலும், அர்ச்சுனா எம்.பி பேசிய விடயங்களை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு சபாநாயகர் அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version