Home இலங்கை அரசியல் பிரபாகரனின் உப்பு…! சபையில் அர்ச்சுனாவை வம்புக்கிழுத்த சுனில் ஹந்துன்நெத்தி

பிரபாகரனின் உப்பு…! சபையில் அர்ச்சுனாவை வம்புக்கிழுத்த சுனில் ஹந்துன்நெத்தி

0

பிரபாகரனின் உப்பு என்று இனி கிடையாது. நாங்கள் முழு நாட்டையும் ஒன்றிணைத்து உள்ளோம் என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunneththi) தெரிவித்துள்ளார்.

ஆனையிறவு உப்பு விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன் நெத்திக்கும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சனாவுக்கும் (Ramanathan Archchuna) இடையே கடும் வாக்குவாதம்  ஏற்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“அர்ச்சுனா, நீங்கள் ஆனையிறவுக்கு சென்று வடக்கின் உப்பை தெற்குக்கு அனுப்பக்கூடாது என்று அங்குள்ள ஊழியர்களை கொண்டு போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்.

தொழிற்சாலையின் முகாமையாளரை மாற்றுமாறு

வடக்கு உப்பு தெற்கு உப்பு என்று இல்லை.

நாட்டின் உப்பு தான் காணப்படுகிறது. வடக்கு உப்பு தெற்கு உப்பு
என இருந்தால் அதனை அந்தக் காலத்தில் வைத்திருங்கள்.

நீங்கள் அந்தக் காலத்தில் பிரபாகரனின் உப்பு என உருவாக்கினீர்கள்.

நாங்கள் முழு நாட்டையும் ஒன்றிணைத்துள்ளோம் என சபையில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.

அதைவிட உப்பு தொழிற்சாலையின் முகாமையாளரை மாற்றுமாறு கூறியிருக்கிறீர்கள்.

அதாவது அவர் கிளிநொச்சியை சேர்ந்தவராம். யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் அல்லவாம்.

அவ்வாறு செய்ய முடியுமா? முகாமையாளர் மீது தவறு இருந்தால் இடமாற்றம் செய்வது வேறு கதை. இவர்கள் சொல்வது போல ஆனையிறவில் யாழ்ப்பாணத்தவர்கள் மாத்திரம் தான் இருக்க வேண்டுமா?

கிளிநொச்சியை சேர்ந்தவருக்கு யாழ்ப்பாணத்தில்
இருக்க முடியாது என்று சட்டம் எதுவும் கிடையாது. கிளிநொச்சியை சேர்ந்த வருக்கு யாழ்ப்பாணத்தில் தொழில் செய்ய முடியாதா? என அர்சசுனாவிடம் கேள்வி எழுப்பினர்.

பிரதேசவாதம் கதைப்பது

இதற்கு பதிலளித்த அர்ச்சுனா எம். பி., “நான் அவ்வாறானதொரு கோரிக்கையை முன் வைக்கவில்லை. ஆனையிறவில் இருந்த முகாமையாளரை மன்னாருக்கு இடமாற்றம் செய்திருக்கிறார்கள். மன்னாரில் உள்ள இவர்களின் தொழிற்சங்க பிரதிநிதியை ஆனையிறவுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

மக்கள் அங்கு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். 
அதுதான் அதில் எழுதப்பட்டிருக்கிறது. இவர்கள் மிகப்பெரிய
பொய்யைக் கூறுகிறார்கள். எனது மனைவி ஒரு சிங்களவர். நான் எப்படி இவ்வாறான பிரச்னையை எழுப்ப முடியும்?

நான் எவ்வாறு பிரதேசவாதம் கதைப்பது? பொய் சொல்லாதீர்கள்.
பாராளுமன்றத்தில் பொய் பேசாதீர்கள்.” என்று பதிலளித்தார். 

NO COMMENTS

Exit mobile version