Home இலங்கை அரசியல் மூளை குழம்பிய தயாசிறி..! சபையை இரண்டாக்கிய அர்ச்சுனா

மூளை குழம்பிய தயாசிறி..! சபையை இரண்டாக்கிய அர்ச்சுனா

0

தனக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் மூளை குழம்பிய தயாசிறி மற்றும் அவரால் மூளை குழப்பப்பட்ட பிமல் ரத்நாயக்க உட்பட இருவரும் அடிபட்டு கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இந்த நிலையில், தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் அடிபட்டு கொண்டதால் நாடாளுமன்ற சிறப்புரிமை தொடர்பில் பேசுவதற்கு நேரம் கிடைக்கவில்லை என குற்றஞ்சாட்டினார்.

அதனை தொடர்ந்து, தான் கூறவந்த விடயத்தை எங்கே சென்று தெரிவிப்பது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேட்டபோது, இந்த விடயம் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் இல்லை என பிரதி சபாநாயகர் குறிப்பிட்டு அடுத்த நபருக்கான அழைப்பை விடுத்தார்.

அப்போது, மீண்டும் நாடாளுமன்றில் கொந்தளித்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, பிரதி சாபநாகரை நோக்கி தான் கூறவந்த விடயத்தை எப்போது தான் தெரிவிப்பது, தனக்கான நேரத்தை ஒதுக்கி தருமாறு கூச்சலிட்டார்.

https://www.youtube.com/embed/q-ww4pQZlhM

NO COMMENTS

Exit mobile version