யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையின்(Base Hospital Tellippalai) புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் ஒருவர் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்றையதினம் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் 30 ில்லியன் பெறுமதியான பணம் வைத்தியர் ஒருவரினால் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிக்கு தெரியாமலும் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காமலும் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்துகிறார்.
இது தொடர்பாக வைத்தியசாலை பணிப்பாளர் தேவநேசன் நேசையாவிடம் கேட்டால் தனக்கு எதுவும் தெரியாது என்கிறார். மாகாண பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரனை கேட்டால் அவரும் தெரியாது என்கிறார்.
எனவே இது தொடர்பாக குறித்த வைத்தியருக்கு எதிராக இலஞ்ச ஊழில் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன் அவர் தெரிவித்த மேலும் பல விடயங்கள் காணொளியில்…
https://www.youtube.com/embed/1MesHrHaWgU
