Home இலங்கை அரசியல் அமைச்சரின் பாதணி என் காரில் உள்ளது: நாடாளுமன்றில் கிண்டலடித்த அர்ச்சுனா

அமைச்சரின் பாதணி என் காரில் உள்ளது: நாடாளுமன்றில் கிண்டலடித்த அர்ச்சுனா

0

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் (
Ramalingam Chandrasekar), யாழில் இருந்து மக்களால் விரட்டப்பட்டது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (30) உரையாற்றும் போதே அவர் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அமைச்சர் சந்திரசேகரன் அன்று யாழில் செறுப்பு இல்லாமல் ஓடினார்.

அவருடைய செறுப்பு தற்போதும் எனது காரில் உள்ளது, தேவையென்றால் எடுத்து கொள்ளலாம்.

எந்த நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா அடித்து விரட்டுப்படுவார் என அமைச்சர் தெரிவித்தாரோ இன்று அதே இடத்தில் அவர் அடித்து விரட்டப்பட்டுள்ளார்.

இவ்வாறு திறத்தும் அளவிற்கு மக்கள் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றால் அவர்களிடத்தில் தமக்கான தேவைகள் தொடர்பில் அதிக வலிகள் உள்ளது.

எங்களுடைய தேவைகளை புரிந்து கொள்ளுங்கள் என்றுதான் தமிழ் மக்கள் கேட்கின்றார்களே தவிர நாட்டை இரண்டாக பிளக்க வேண்டும் என அவர்கள் ஒரு போதும் நினைக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/Gn2Jgu8C0BQ?start=86

NO COMMENTS

Exit mobile version