Home இலங்கை அரசியல் செம்மணி ஆர்ப்பாட்டத்தில் அரசியல்வாதிகள் விரட்டப்பட்டது ஏன்? பின்னணியில் யார்…!

செம்மணி ஆர்ப்பாட்டத்தில் அரசியல்வாதிகள் விரட்டப்பட்டது ஏன்? பின்னணியில் யார்…!

0

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேச கண்காணிப்புடனான மனிதப் புதைகுழி அகழ்வை வலியுறுத்தியும் கடந்த 23ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரையில் செம்மணி வளைவுப் பகுதியில் வெகுசனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி ஆரம்பிக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளில் பெருந்திரளான மக்களின் வருகையுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த, அணையா விளக்கு போராட்டத்தில் பங்கேற்பதற்காக போராட்ட களத்திற்கு சென்ற, அமைச்சர் சந்திரசேகரன், இரா.சாணக்கியன்,இளங்குமரன் மற்றும் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் மக்களால் அடித்து துரத்தப்பட்டனர்.

இது தொடர்பில் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் நேர்மறை மற்றும் எதிர்மறையான கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்நிலையில், செம்மணி போராட்டத்தில் அரசியல்வாதிகள் விரட்டப்பட்டது ஏன்? அதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து, மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் ரஜுவ்காந்த்,எமக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்துள்ள கருத்துக்களை இங்கு முழுமையாக காணலாம்…,

NO COMMENTS

Exit mobile version