வடக்கு மாகாணத்துக்கு 2026 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எந்தவித பயனும் இல்லாததால் தான் ஜனாதிபதியால் பாதீடு வாசிக்கப்பட்டபோது நித்திரையில் ஆழ்ந்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டம்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தான் நித்திரை கொண்டமை தொடர்பாக நிசாம் காரியப்பர் நேற்று சபையில் கருத்து வெளியிட்டிருந்ததாகவும், அது எனது தனிப்பட்ட விடயம்.
அத்துடன், சபைக்கு வந்ததன் பின்னர் பாதீட்டை முழுமையாக வாசித்ததாகவும், அதில் குறிப்பிட்டுள்ள விடயங்களை தன்னால் கூற முடியும்.
வடக்கு குறித்து இந்த பாதீட்டில் எந்த விடயங்களும் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவித்த அர்ச்சுனா, அதனால் தனக்குச் சம்பந்தப்படாத விடயம் என்பதனாலேயே தான் நித்திரை கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
