அமைச்சர் சந்திரசேகரனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் நாடாளுமன்றத்தில் அமைதியின்மை நிலவியுள்ளது.
அர்ச்சுனா தேர்தலின் போது வெளிநாட்டவர்களிடையே பணத்தை ஏமாற்றி பெற்றுக் கொண்ட வசூல் மன்னன் என சந்திரசேகரன் அவரை வர்ணித்துள்ளார்.
இதனையடுத்து, இன்றையதினம் இருவருக்குமிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதால் நாடாளுமன்றம் கேலிக் கூத்தான இடமாக மாறியுள்ளது.
அத்தோடு, பெண்களைக் கொச்சைப்படுத்தியதன் காரணமாக தற்போது நடைபெற்ற தேர்தலில் அர்ச்சுனா ஒரு உறுப்பினரைக் கூட பெற முடியவில்லை எனவும் அமைச்சர் சந்திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
