Home இலங்கை அரசியல் நாட்டில் தொடரும் அச்சுறுத்தல்: பாதுகாப்பு கோரும் அர்ச்சுனா எம்.பி

நாட்டில் தொடரும் அச்சுறுத்தல்: பாதுகாப்பு கோரும் அர்ச்சுனா எம்.பி

0

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் தான் செயற்படுவதற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் நேற்றைய(24) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் வலம்புரி ஹோட்டலில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் தனது செயலாளர் தாக்கப்பட்டதுடன் இது தொடர்பில் நான் காவல்துறையில் முறைப்பாட்டை அளித்திருந்ததை அடுத்து காவல்துறையினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அத்தோடு, அண்மையில் கணேமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்டதுடன் இந்த வாரமே தொடர் அர்ச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இவ்வாறான சூழலில் எனக்கு எதிராக நடைபெறும் அச்சுறுத்தல் குறித்து கவனிக்கப்பட வேண்டும்.

ஆகவே, எனக்கு பாதுகாப்பு உறுதி செய்வதற்காக இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/zsIZQxMxG04

NO COMMENTS

Exit mobile version