Home இலங்கை அரசியல் சபாநாயகரிடம் அர்ச்சுனா எம்.பியின் அவசர கோரிக்கை

சபாநாயகரிடம் அர்ச்சுனா எம்.பியின் அவசர கோரிக்கை

0

தனது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்குமாறு யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த விடயத்தை இன்று (25) நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 12ஆம் திகதி எனக்கு வலம்புரி ஹோட்டலில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அப்போது எனது செயலாளரும் தாக்கப்பட்டார்.

இது தொடர்பில் நான் காவல்துறையில் எனது முறைப்பாட்டை அளித்திருந்ததை அடுத்து காவல்துறையினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

இருப்பினும், இது தொடர்பில் என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான விடயங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் நான் தொழிற்படுவதற்கு எனக்கு பாரிய அசச்சுறுத்தலாக அமைகின்றது.

அத்தோடு, அண்மையில் கணேமுல்ல சஞ்சீவ (Ganemulla Sanjeeva) நீதிமன்றத்தில் கொலை செய்யப்பட்டதுடன் இந்த வாரமே தொடர் அர்ச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இவ்வாறான சூழலில் எனக்கு எதிராக நடைபெறும் அச்சுறுத்தல் குறித்து கவனிக்கப்பட வேண்டும்.

ஆகவே, எனக்கு பாதுகாப்பு உறுதி செய்வதற்காக இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இது தொடர்பான வேண்டுகோளை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு தெரிவிக்குமாறு நான் கேட்டுக்கொள்வதுடன் சபாநாயகரின் சாதகமான பதிலையும் எதிர்பார்க்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/zsIZQxMxG04

NO COMMENTS

Exit mobile version