Home இலங்கை அரசியல் தன்னால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை: பாதுகாப்பை கோரும் அர்ச்சுனா

தன்னால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை: பாதுகாப்பை கோரும் அர்ச்சுனா

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னர் தன்னால் சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில் உள்ளதாகக் கூறி, யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனிப்பட்ட பாதுகாப்பை கோரியுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (26.11.2024) ஆரம்பமான திசையமைப்பின் முதல் நாளின் போதே, அவர் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், பாதுகாப்பை பெற்றுக் கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பொதுப் பாதுகாப்பு அமைச்சிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க வேண்டும் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் சமிந்த குலரத்ன அவருக்கு பதிலளித்துள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று கூறியுள்ளது.

பொலிஸ் பாதுகாப்பு

கைத்துப்பாக்கி மற்றும் பாதுகாப்பை வழங்குவது நாடாளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் முழுமையாக உள்ளடக்கப்படவில்லை என்றும் பொது பாதுகாப்பு அமைச்சே அதற்கான பொறுப்பை வகிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அமைச்சின் மதிப்பீட்டின் படி, பொலிஸ் பாதுகாப்பு அல்லது கைத்துப்பாக்கியைப் பெறுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு உரிமை உண்டு என்றும் நாடாளுமன்ற பிரதி செயலாளர் சமிந்த குலரத்ன குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version