Home இலங்கை அரசியல் எம்.பி அர்ச்சுனாவின் பிடியாணை இரத்து!

எம்.பி அர்ச்சுனாவின் பிடியாணை இரத்து!

0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது சட்டத்தரணி ஊடாக இன்று(28) நீதிமன்றில் முன்னிலையான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி இன்னுமொரு மகிழுந்துடன் மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், வாகன சாரதியைத் தாக்கிக் கடுமையாகக் காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

வழக்கு விசாரணை

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சந்தேகத்திற்குரிய விசாரணைகளில் பிறப்பிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்ந்தும் வழக்கு முன்னிலையாவதைத் தவிர்த்து வருவதனால் அவருக்குப் பிடியாணை இந்நிலையில் அர்ச்சனாவிற்குப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version