Courtesy: Sivaa Mayuri
முன்னாள் அரசியல்வாதியினால், சிங்கள சமூகத்திற்கு எதிராக அறிமுகப்படுத்தப்பட்ட சிறு குடும்பம் (புஞ்சி பவுல ரத்தரன்) என்ற கருத்தாக்கத்தின் மூலம், விலங்குகளின் சனத்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிக்கப்படுவதாக ஜனசேத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சர் கே.டி லால்காந்த, நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், தேரர், இந்த கருத்தை ஊடகங்களிடம் பரிந்துரைத்துள்ளார்.
சிங்கள இனத்தை அழிக்கும் நோக்கில் 1980களில் புஞ்சி பவுல ரத்தரன் யோசனை அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
இந்தநிலையில், இந்த நடைமுறையை விலங்குகளுக்குப் பயன்படுத்தினால், அவைகளும் படிப்படியாக அழிவை சந்திக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவற்றைத் தடுக்குமாறு அமைச்சர் பரிந்துரைத்தமையை தேரர் விமர்சித்துள்ளார்.
பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளை கொல்ல அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளமையானது, கிராமப்புற சமூகங்களை தவறாக வழிநடத்தும் வகையில் அமையும் என தேரர் வாதிட்டுள்ளார்.
எந்தவொரு விலங்கையும் கொன்றால், பொலிஸார் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பார்கள், அது சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கும் என்றும் சீலரத்தன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லால்காந்தவின் கூற்று நடைமுறைச் சாத்தியமற்றது என விமர்சித்த தேரர், பயிர்களை சேதப்படுத்தும் விலங்குகளுக்கு எதிராக நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் புதிய யோசனையை முன்வைத்தமைக்காக அமைச்சர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.