Home இலங்கை பொருளாதாரம் சலுகை விலையில் தேங்காய் வழங்கும் கர்தினால்

சலுகை விலையில் தேங்காய் வழங்கும் கர்தினால்

0

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சலுகை விலையில் அரசாங்கத்திற்கு தேங்காய் வழங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் தேங்காய்க்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேங்காயின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய கர்தினாலுக்கு சொந்தமான தென்னந்தோப்புக்களிலிருந்து சலுகை விலையில் தேங்காய்களை வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தெங்கு அபிவிருத்தி

தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கர்தினாலின் தோட்டத் தேங்காய் ஒன்று 130 ரூபாவிற்கு வழங்கப்படுவதாகவும் இவை சதொச நிறுவனங்கள் ஊடாக மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version