Home இலங்கை அரசியல் தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு தாக்கல் : அரியநேத்திரன் கடும் விசனம்

தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்கு தாக்கல் : அரியநேத்திரன் கடும் விசனம்

0

தமிழரசுக்கட்சியின் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டமைக்கு கட்சியில் நேர்மையானவர்கள், உண்மையானவர்கள், உறுதியானவர்கள் மற்றும் பற்றாளர்கள் இல்லாத ஒரு நிலையே காரணமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஞா.சிறிநேசனை (Gnanamuthu Sreenesan) வெற்றி பெறச்செய்வதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய பணிகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று(15) மாலை வவுணதீவில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சி

இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “இலங்கை தமிழரசுக் கட்சி நீண்டகாலத்திற்கு பின்னர் தனித்துவமாக இந்த தேர்தலில் போட்டியிடும் நிலைமை இருக்கின்றது.

தேர்தலில் நிச்சயமாக இலங்கை தமிழரசுக் கட்சி மூன்று ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு இருக்கின்றது.

அந்த மூன்று ஆசனங்களை பெறுவது மாத்திரம் நோக்கம் அல்ல ஆசனங்களை பெறுவதில் அந்த ஆசனத்தில் வரக்கூடியவர்கள் யார் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் இன்று பல்வேறுபட்ட இன்னல்கள், பிளவுகள், சட்டங்கள் மற்றும் வழக்குகள் என்று போடப்பட்டிருக்கின்றது.

வழக்கு தாக்கல்

நேற்று ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது இந்த காரணங்களை நாங்கள் பார்க்கின்ற போது அதிலே நேர்மையானவர்கள், உண்மையானவர்கள், உறுதியானவர்கள் மற்றும் பற்றாளர்கள் அந்த கட்சியிலே இல்லாததன் காரணமாக இவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அதை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் இலங்கை தமிழரசுக் கட்சி மாத்திரம் வெற்றி பெறக் கூடாது .

இலங்கை தமிழரசுக் கட்சியிலிருந்து செல்கின்ற உறுப்பினர்கள் உறுதியானவர்களாக உண்மையானவர்களாக நேர்மையானவர்களை நாங்கள் இனங்காணவேண்டும்.

பெயருக்கு நடிப்புக்கு நாடகத்துக்கு எங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை, சேவை செய்யக்கூடியவராகயிருக்க வேண்டும், உறுதியானவராகயிருக்கவேண்டும் மற்றும் அத்தகட்டத்துக்கு தமிழ் தேசியத்தினை வழி நடத்தக்கூடியவராகயிருக்க வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான மாவீரர்கள்

இலங்கை தமிழரசுக் கட்சியை காப்பாற்ற வேண்டிய நிலையில் நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம்.

நாங்கள் பல்லாயிரக்கணக்கான மாவீரர்களை ஆகுதியாக்கிய மண் இந்த மண் ஆகவே அவர்களின் தியாகங்களுக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

அவர்கள் தியாகங்கள் எழ வேண்டும் என்பதற்காகத்தான் நான் ஜனாதிபதி தேர்தலில் கூட நான் ஒரு தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட்டு இரண்டு லட்சத்து 26 ஆயிரம் வாக்குகளை எடுத்து நான் உலகத்துக்கு காட்டி இருக்கின்றேன் என்றால் அந்த தமிழ் தேசியம் இந்த மண்ணிலே வடகிழக்கிலே தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றது என்று அதற்கு பிறகு வந்த இந்த தேர்தலிலும் நாங்கள் அதனை வெளிப்படுத்தவேண்டியுள்ளோம்.

ஏனென்றால் இப்பொழுது இருக்கின்ற ஜனாதிபதி மாற்றம் என்பது எல்லோரையும் அழைத்து பதவி கொடுக்கின்ற ஜனாதிபதியாக அவரை நாங்கள் பார்க்க முடியாது யார் வென்றாலும் அவர்கள் எதிர்க்கட்சியில் வரக்கூடிய நிலைமையே உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version