Home இலங்கை அரசியல் அரியநேத்திரனை எதிர்க்கும் சுமந்திரன் : விக்னேஸ்வரன் கொதிப்பு

அரியநேத்திரனை எதிர்க்கும் சுமந்திரன் : விக்னேஸ்வரன் கொதிப்பு

0

இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக பாக்கியசெல்வம் அரியநேத்திரனை (ariyanethran)எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கியுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்(TMTK) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்(C. V. vigneswaran) நேற்று (18) தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தால் அது தமிழர் பிரச்சினையை மேலும் சர்வதேச மயப்படுத்த உதவும் என விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

சுமந்திரன் மீது குற்றம் சாட்டும் விக்கி

அரியநேத்திரனின் வேட்புமனுவை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதற்காக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்(sumanthiran), மீது அவர் குற்றம் சாட்டினார்.

“சுமந்திரனின் எதிர்ப்பு பொருத்தமற்றது. ஒரு காலத்தில் இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணத்தில் நாங்கள் திட்டமிட்ட பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்” என்று விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தேர்தலை புறக்கணிக்குமாறு அழுத்தம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின்(Gajendrakumar Ponnambalam) அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸே (AITC) தேர்தலை புறக்கணிக்குமாறு அழுத்தம் கொடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். எவ்வாறாயினும், அரியநேத்திரன் போட்டியிட விருப்பம் தெரிவித்ததால், அவருக்கு ஆதரவளிப்பது அனைவரினதும் பொறுப்பாகும்.

அரியநேத்திரனுக்கு கணிசமான வாக்களிப்பு வலுவான செய்தியை அனுப்பும் என நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் வாக்களிக்க தகுதி பெற்றோர் 

இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வசிக்கும் 593,187 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னியில் 306,081 வாக்காளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 449,686 வாக்காளர்களும், திகாமடுல்ல மாவட்டத்தில் 555,432 வாக்காளர்களும், திருகோணமலை மாவட்டத்தில் 315,925 வாக்காளர்களும் உள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version