Home இலங்கை அரசியல் அரியநேத்திரனை வைத்து பொய் பிரசாரம்: சுமந்திரனிக்கு பதிலடி கொடுத்த முன்னாள் எம்.பி

அரியநேத்திரனை வைத்து பொய் பிரசாரம்: சுமந்திரனிக்கு பதிலடி கொடுத்த முன்னாள் எம்.பி

0

தமிழரசுக் கட்சியில் இருந்து நான் விலக்கப்பட்டேன் என தெரிவித்து இதுவரையில் எனக்கு எவ்வித உத்தயோகப்பூர்வ கடிதமும் கிடைக்கவில்லை என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் (P. Ariyanethiran) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பல்வேறு ஊடகங்களிலும் மற்றும் கூட்டங்களிலும் நான் தமிழரசுக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டதாக பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றது.

இருப்பினும், இது தொடர்பில் நான் தமிழரசுக் கட்சிக்கு விளக்கம் கோரி அனுப்பிய கடித்தத்திற்கு இன்னும் எனக்கு பதில் கிடைக்கவில்லை.

குறித்த கடிதத்தை தமிழரசுக் கட்சியின் முன்னாள் செயலாளர் ப.சத்தியலிங்கம் பதவில் இருக்கும் போதே நான் சமர்ப்பித்த நிலையில் இன்று வரை எனக்கு பதில் கிடைக்கவில்லை.

ப.சத்தியலிங்கம் (P. Sathiyalingam) பதிவியில் இருக்கும் போது நான் அனுப்பிய கடிததிற்கு இன்று செயலாளராக இருக்கும் சட்டத்தரணி சுமந்திரனிடம் (M. A. Sumanthiran) இருந்து பதில் கடிதம் வருமாயின் அது போலியாகவே கருதப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலைமை, தமிழர் தரப்பு அரசியல், தமிழ் அரசியல் தலைமைகளின் தற்போதைய நகர்வுகள் மற்றும் பலதரப்பட்ட அரசியல்சார் விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/n9xJ5KBbDrE

NO COMMENTS

Exit mobile version