Home இலங்கை சமூகம் அவசரகால நிலைமையை கட்டுப்படுத்த அதிரடியாக களமிறக்கப்படும் அதிரடிப்படையினர்

அவசரகால நிலைமையை கட்டுப்படுத்த அதிரடியாக களமிறக்கப்படும் அதிரடிப்படையினர்

0

ஜனாதிபதி தேர்தல் தினத்தன்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் போதும் நாட்டில் ஏற்படக்கூடிய அவசர நிலைமையை எதிர்கொள்வதற்காக பொலிஸ் மற்றும் ஆயுதப் படைகளை ஒருங்கிணைத்து ‘அவசரகாலத் திட்டத்தை’ தயாரிப்பதற்கு ஜனாதிபதி பாதுகாப்புத் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளார்.

அவசரகால நிலை ஏற்படக்கூடும் என பாதுகாப்பு சபை கூட்டத்தின் போது பாதுகாப்பு பிரதானிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியமையே இதற்கான காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அவசர நிலையில் பொலிஸாருக்கு உதவியாக இராணுவத்தை களமிறக்குவது மற்றும் இராணுவம் தனது அதிகாரங்களை அவசர காலத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகத்துடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

 

அவசரகால பாதுகாப்பு திட்டம் 

பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் கீழ் முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர்கள் தலைமையில் அவசரகால பாதுகாப்பு திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

அதற்கான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் 18ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, முப்படைகளின் தளபதிகள் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன் பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைபடுத்துவதற்காக ஜனாதிபதியின் தலைமையில் தேர்தலுக்கு முன்னர் அவசர பாதுகாப்புச் சபைக் கூட்டமும் நடத்தப்பட உள்ளது.

NO COMMENTS

Exit mobile version