Home இலங்கை அரசியல் முப்படைகளை பலப்படுத்துமாறு நாமல் அநுரவிடம் கோரிக்கை

முப்படைகளை பலப்படுத்துமாறு நாமல் அநுரவிடம் கோரிக்கை

0

புலனாய்வு அமைப்புகள் மற்றும் முப்படைகளையும் பலப்படுத்துவதன் மூலம் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க முடியும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் நேற்று (28.10.2024) நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி (Sri Lanka Podujana Peramuna) கூட்டத்தில் நாமல் ராஜபக்ச இதனை குறிப்பிட்டுள்ளார்.

பௌத்த கலாசாரத்தினை மையமாகக் கொண்டு பௌத்த கலாசாரம், திராவிட கலாசாரம் மற்றும் இஸ்லாமிய கலாசாரத்தை பாதுகாக்கக்கூடிய கட்சி பொதுஜன பெரமுன கட்சியாகும்.

ஜனாதிபதியிடம் கோரிக்கை

தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் சர்வதேச பௌத்த பிரிவுகளுடன் பேசுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்த மூன்று ஆயுதப் படைகள், காவல்துறை மற்றும் உளவுத்துறை அமைப்பு எங்களிடம் உள்ளது.

எனவே இந்த முப்படைகள், காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் மீது நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்  என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version