பாதாள உலக குழு நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் காவல்துறையினரால் தென்பகுதியில் துப்பாக்கிகளும் அவற்றுக்குரிய மகசின்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மினுவாங்கொடை காவல்துறை பிரிவிலேயே சட்டவிரோத துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் நேற்று (15) கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்
இதன்போது, T-56 துப்பாக்கி, T-56 துப்பாக்கிக்கான மகசின், T-56 தோட்டாக்கள்,பிஸ்டல் துப்பாக்கி,அதற்குரிய மகசின், 2.5 mm தோட்டாக்கள், 9 mm தோட்டாக்கள், 02 துப்பாக்கி மாதிரிகள், 03 வாள்கள் மற்றும் 02 கத்திகள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
