Home இலங்கை சமூகம் இராணுவ படையினருக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை

இராணுவ படையினருக்கு இராணுவ தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை

0

இராணுவ படையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் படை அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்றிகோ தெரிவித்துள்ளார்.

பூரண ஒத்துழைப்பு

இராணுவத்தின் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவோருக்கு தராதரம் பாராது இராணுவ சட்டங்களின் பிரகாரம் தண்டனை விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு அபகீர்த்தி ஏற்படுத்துவோர் உடன் சேவையிலிருந்து நீக்கப்படுவர் என இராணுவத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து துறைகளிலும் ஊழல் மோசடிகளை மேற்கொள்வோர் இருக்கக் கூடும். அவ்வாறானவர்கள் இராணுவ சேவையில் கடமையாற்றி வந்தால், அவர்களுக்கு எதிராக பொலிஸார் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என இராணுவத் தளபதி ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version