நெஞ்சத்தை கிள்ளாதே
டிஆர்பியை அதிகமாக்க ஜீ தமிழிலும் ஏகப்பட்ட சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பி வருகிறார்கள்.
இப்படி வளர்ந்து வரும் நேரத்தில் அண்மையில் இவர்களது தொலைக்காட்சியில் நடந்த ஒரு விஷயம் ரசிகர்களை கடுமையாக பாதித்துள்ளது.
அதாவது மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நெஞ்சத்தை கிள்ளாதே தொடரை தொடங்கிய 6 மாதத்தில் முடித்துள்ளனர், இது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த சீசன் பிக் பாஸ் தொகுப்பாளர் மாற்றமா? விஜய் டிவி நிர்வாகம் கொடுத்த தகவல்
ரேஷ்மா பதில்
இந்த சீரியல் முடிவடைந்ததால் நடிகை ரேஷ்மாவின் ரசிகர்கள் டுவிட்டரில் அவருக்கு சப்போர்ட் செய்து நிறைய டுவிட் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நடிகை ரேஷ்மா தனது இன்ஸ்டாவில், சீரியல் முடிந்தது குறித்தும் தனக்க சப்போர்ட் செய்யும் ரசிகர்கள் குறித்தும், அவர்களுக்கு எதிராக வரும் விமர்சனங்கள் பற்றியும் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.