Home இலங்கை சமூகம் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விரைந்து மீட்டெடுத்த இராணுவத்தினர்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விரைந்து மீட்டெடுத்த இராணுவத்தினர்

0

வசந்தபுரம் தாழ்வு நில பகுதியில் வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை
விரைந்து சென்று மீட்பு பணியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலையில் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில்
மழை பெய்துவருகின்றது.

இதனால் வெள்ளம் வீடுகளுக்குள் உட்புகுந்ததனால்
பாடசாலைகளில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்கும் பணி

இந்நிலையில் நேற்றையதினம் (26) பெய்த கனமழையால் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலக
பிரிவிற்குட்பட்ட வசந்தபுரம் கிராமத்தின் தாழ்வு நில பகுதிகளில் உள்ள
வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

அதனையடுத்து
கேப்பாப்பிலவவு இராணுவ முகாம் பொறுப்பதிகாரி ஜெனரல் கெட்டியாராய்ச்சி
தலைமையிலான
இரணுவத்தினர் , பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களை
மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட மக்கள் தற்போது கரிவேலன்கண்டல் பாடசாலை இடைத்தங்கல்
முகாம்களிலும், உறவினர் வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

NO COMMENTS

Exit mobile version