Home இலங்கை சமூகம் நுவரெலியாவில் இராணுவத்தினரால் தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

நுவரெலியாவில் இராணுவத்தினரால் தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

0

இராணுவத்தினரால் நுவரெலியா (Nuwara Eliya) மாநகர சபை எல்லைக்குட்பட்ட நுவரெலியா பிரதான நகர்
மற்றும் கிரகறி வாவி கரையோரம் பகுதிகளை சுத்தப்படுத்தல் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இந்நடவடிக்கையானது, இன்று (26) மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்போது, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்குடனும் டெங்கு நோயின் தாக்கத்தை
இப்பிரதேசத்தில் கட்டுப்படுத்தும் முகமாகவும் வீதியோரங்களில் தேங்கிக்
காணப்பட்ட கழிவுகள் குப்பைகூழங்கள் காடுமண்டிய இடங்கள் யாவும் அகற்றி
சுத்தப்படுத்தி சூழலை அழகுபடுத்தியுள்ளனர்.

தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் 

மேலும், இந்த தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டத்தில் நுவரெலியாவில் பிரசித்தி பெற்ற
ஐந்து ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் தங்களது
பங்களிப்பினை வழங்கி தூய்மைப்படுத்தல் வேலைத்திட்ட பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பட்டதுடன் எதிர்காலங்களில்
சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் நுவரெலியா பிராந்தியத்தில் குப்பை
கூழமில்லாமல் சுத்தமாக பேணுவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்
எடுப்பது குறித்தும் இராணுவ உயரதிகாரிகளினால் விரிவாக ஆராயப்பட்டமை
குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version