Home இலங்கை சமூகம் இராணுவ வீரர்களின் கடவுச்சீட்டுக்களை உடன் மீளப்பெற நடவடிக்கை

இராணுவ வீரர்களின் கடவுச்சீட்டுக்களை உடன் மீளப்பெற நடவடிக்கை

0

மேஜர் பதவிக்குக் கீழே உள்ள அனைத்து இலங்கை இராணுவ வீரர்களையும் தங்கள் கடவுச்சீட்டுக்களை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிர்வாக நோக்கங்களுக்காகவும் வெளிநாட்டு பயிற்சி மற்றும் அலுவலக விடயங்களுக்கு கடவுச்சீட்டுக்களை பெறுவதில் ஏற்படும் தாமதங்களை நிவர்த்தி செய்யும் நோக்கிலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார். 

தாமதம்… 

அதிக எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள் வீட்டை விட்டு தொலைவில் பணியாற்றி வருவதனால், அதிகாரபூர்வ தேவைகளுக்க கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதில் கால தாமதங்கள் ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட தேவைகளுக்காக கடவுச்சீட்டுகளை எந்த நேரத்திலும் தங்களது படையணிகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்நடவடிக்கை நிர்வாக காரணங்களுக்காக மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அதேவேளை, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எந்த நேரத்திலும் படைப்பிரிவுகளிலிருந்து கடவுச்சீட்டுக்களை மீளப்பெறலாம் என்று வருண கமகே தெளிவுபடுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version