Home முக்கியச் செய்திகள் கிளிநொச்சியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்

கிளிநொச்சியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்

0

கிளிநொச்சி இராணுவ முகாமில் உள்ள இராணுவ சிப்பாய் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகாமில் இருந்து தனது விடுப்புக்காக இன்று வீடு செல்ல போது இராணுவத்தினர் நடத்திய சோதனையின் போது, அவரிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சிப்பாயை சோதனை மேற்கொண்ட போது 20 கிரேம் கஞ்சா வைத்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறையிடம் ஒப்படைப்பு

அதனைதொடர்ந்து, இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட சந்தேநபர் கிளிநொச்சி காவல்நிலையத்தின் ஊழல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியால் இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version