அம்பாறை மாவட்டத்தின் மஹா ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடாென்றிலிருந்து இராணுவ வீரர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மின்னேரியா இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மின்னேரியா பீரங்கி படைப்பிரிவில் கடமையாற்றும் இராணுவ வீரரின் மனைவியுடன் தகாத உறவில் குறித்த வீரர் இருந்துள்ளார்.
இராணுவவீரர் பொலிஸாரினால் கைது
இதன் காரணமாக பெண்ணின் கணவரான மற்றுமொரு இராணுவ வீரர் குறித்த நபரை வெட்டிக்கொலை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் இராணுவ வீரர் மஹாஓயா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
