சிறிலங்காவின் மனித உரிமை ஆணையகம் சார்ந்த விசாரணைக்குழுவுக்கு முன்னர் வழங்கப்பட்ட சாட்சியங்கள் இந்த குருரங்கள் மற்றும் திகில் நிலைகளின் பின்னணிகளை மீண்டும் முன்னரங்குக்கு கொண்டுவந்துள்ளது.
செம்மணியில் தற்போது மனித எச்சங்கள் மீட்க்கப்படும் இடத்துக்கு உழவு இயந்திரப்பெட்டியில் தமிழர்களின் உடலங்களை ஏற்றிவந்து அந்தப் பெட்டியை மேலே உயர்த்தி தேங்காய்களை கொட்டுவது உடலங்களை கொட்டி அவற்றை புதைக்கவேண்டும் என உத்தரவு இடப்பட்டமை குறித்த செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணையில் சிக்கிய படைஉறுப்பினர்கள் தம்மிடம் நேரடியாக சொன்ன விடயம் உட்பட பல விடயஙகள் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஆணைக்குழுக்களில் முக்கிய பொறுப்பில் இருந்த எம்.சி.எம். இக்பால் அவர்களால் செய்தி வீச்சுக்கு வழங்கப்பட்டது.
90 களில் கைதடிச் சோதனைசாவடியில் தாம் தினசரி காலை முதல் மாலைவரை சந்தேகத்தில் தடுத்துவைக்கும் தமிழர்களை மாலைவேளையில் ஒரு இராணுவவாகனம் ஏற்றிச்செல்லும எனவும், அதன்பின்னர் அவ்வாறு கொண்டு சென்றவர்களுக்கு என்ன நடந்தது என்ற விடயம் தங்களுக்குத்தெரியாது என படைத்தரப்பு குறிப்பிட்டதாகவும் எம்.சி.எம். இக்பால் செய்திவீச்சுக்கு குறிப்பிட்டார்.
சிறிலங்காவின் நான்கு ஜனாதிபதி விசாரணை ஆணையங்களில் செயலாளர் உட்பட்ட முக்கியபொறுப்புக்களை வகித்தவர் எம்.சி.எம். இக்பால் ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஆசிய பசிபிக் பிராந்திய பிரிவில் ஆலோசகராகவும் இரண்டு முறைபணியாற்றியவர்.
யாழ்ப்பாணத்தில் 90 ஆம் ஆண்டு முதல் 98 ஆம் ஆண்டுவரை நடந்த வலிந்;து காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக வாக்கு மூலங்கள் மற்றும் சாட்சியங்களை பதிவுசெய்த தேவநேசன் நேசையா குழுவிலும் இவர் செயலாளராக இருந்த நிலையில் அவர் செய்திவீச்சுக்கு குறிப்பிட்ட பரபரப்பான பிரத்தியேக விடயங்களை தாங்கிவருகிறது இன்றைய பதிவு….
https://www.youtube.com/embed/a8Wx2Sh6W6M
