Home இலங்கை சமூகம் திருகோணமலையில் விபத்தில் சிக்கிய இராணுவ வாகனம்

திருகோணமலையில் விபத்தில் சிக்கிய இராணுவ வாகனம்

0

திருகோணமலையில் (Trincomalee) இராணுவத்துக்கு சொந்தமான கெப்ரக வாகனம் மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் இன்று (02) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை _தம்பலகாமம் காவல் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை கண்டி பிரதான
வீதியின் 13ம் கட்டை சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருகோணமலையில் இருந்து வந்த காரும் மற்றும் தம்பலகாமம் 13 ஆம் கட்டை
சந்தி வலைவில் திருப்பிய இராணுவத்துக்கு சொந்தமான கெப் ரக வாகனமும் ஒன்றுடன்
ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version