Home முக்கியச் செய்திகள் இராணுவ முகாம்களில் இருந்து துப்பாக்கிகள் மாயம் : ஜனாதிபதி அநுர வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இராணுவ முகாம்களில் இருந்து துப்பாக்கிகள் மாயம் : ஜனாதிபதி அநுர வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

0

சிறிலங்கா இராணுவ(sri lanka army) முகாமில் இருந்து T56 ரக துப்பாக்கிகள் 73, பாதாள உலகக் குழுக்களின் கைகளில் சிக்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

மேற்கண்ட அதிர்ச்சி தகவலை ஜனாதிபதி அநுர குமார தெரிவித்துள்ளமை தேசிய பாதுகாப்பு தொடர்பில் பாரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று(19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே ஜனாதிபதி, இந்த விடயத்தை தெரிவித்தார்.

13 ராணுவ வீரர்கள் கைது 

இவ்வாறு காணாமற்போன துப்பாக்கிகளில் 38 துப்பாக்கிகளை அதிகாரிகள் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளதாகவும், எஞ்சிய துப்பாக்கிகள் இதுவரை மீட்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 13 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு துறைகளில் பரவலான சீர்கேட்டை உருவாக்கியதற்காக முன்னைய நிர்வாகத்தை விமர்சித்த ஜனாதிபதி, இது தற்போதைய பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பங்களித்துள்ளதாக தெரிவித்தார்.

வடக்கில் இடம்பெற்ற அசம்பாவிதம்

இதேவேளை மன்னார் (mannar)நீதிமன்றுக்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர்களாக சிறிலங்கா இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் யாழ்ப்பாணத்தில்(jaffna) நகைக்கடையொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சிறிலங்கா புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version