Home சினிமா பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் இருந்தது ஏன்?- அர்னவ் மனைவி திவ்யா பளீச்

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் இருந்தது ஏன்?- அர்னவ் மனைவி திவ்யா பளீச்

0

பிக்பாஸ் 8

ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்ற அடைமொழியுடள் புதிய தொகுப்பாளர் விஜய் சேதுபதி களமிறங்க ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி பிக்பாஸ் 8.

இந்த 8வது சீசனில் நிறைய விஷயங்கள் ஸ்பெஷல், முதன்முறையாக தொகுப்பாளராக விஜய் சேதுபதி களமிறங்கியது, எந்த சீசனிலும் இல்லாத அளவு சின்னத்திரை பிரபலங்கள் கலந்துகொண்டது என இப்படி நிறைய விஷயங்கள் கூறலாம்.

எப்படியோ முடிந்த ரோஹினி விஷயம், முத்துவிற்கு ஆரம்பித்த பிரச்சனை, புது வில்லனா?… சிறகடிக்க ஆசை புரொமோ

ஒருவழியாக 100 நாட்கள் மக்கள் பார்த்து வந்த இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி முடிவுக்கும் வந்துவிட்டது.

திவ்யா

இந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் அர்னவ்-அன்ஷிதா கலந்துகொள்கிறார்கள் என்ற பேச்சு வந்தவுடனே திவ்யாவும் கலந்துகொள்கிறார் என கூறப்பட்டது.

அண்மையில் திவ்யாவிடமும் இன்ஸ்டாவில் ரசிகர்கள் அதிகம் கேட்க அவர் பதில் கூறியிருக்கிறார். அதில் அவர், பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் ஏன் நீங்கள் வரவில்லை என நிறைய பேர் கேட்கிறார்கள், அவர்களுக்கு விளக்கம் கொடுக்க நினைக்கிறேன்.

நான் கலந்துகொள்ளவே முதலில் நினைக்கவில்லை, காரணம் எனக்கு ஒரு குட்டி பொண்ணு இருக்கிறாள். அவளை வைத்துக் கொண்டு படப்பிடிப்பே செல்ல முடியவில்லை, வந்தவுடன் அப்படி தேடுவார்.

குழந்தையை விட்டுவிட்டு என்னால் 100 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்க முடியாது. அதேபோல் நான் செவ்வந்தி சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். அந்த சீரியலில் இருந்து என்னால் விலக முடியாது என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version