Home இலங்கை குற்றம் அம்பாறையில் போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு விளக்கமறியல்

அம்பாறையில் போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு விளக்கமறியல்

0

அம்பாறையில் (Ampara) நீண்ட காலமாக போதைப் பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான கணக்காளரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கைதான குறித்த சந்தேக நபரை இன்று (23.04.2024) நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய வேளை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி வரை 05 நாட்கள் தடுப்பு காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 39 வயதுடைய கமறுத்தீன் முஹம்மது றியாஸி என்ற கணக்காளரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேலின் ஆபத்தான வலையில் வீழ்த்தப்பட்ட ஈரான்! காத்திருக்கும் சிக்கல்

கைது நடவடிக்கை

சந்தேக நபரான கணக்காளர் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் மருதமுனை பகுதியில் வைத்து பெரிய நீலாவணை பொலிஸாரினால் கடந்த திங்கட்கிழமை(22) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் மருதமுனை நகரை அண்டிய பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பெரிய நீலாவணை பொலிஸார் குறித்த கணக்காளரை கைது செய்ய துரித விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் கணக்களார் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 840 மில்லி கிராம் கேரளா கஞ்சா 4 கிராமும் 540 மில்லி கிராமும் மீட்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளராக பணியாற்றியவர் என்பதுடன் தற்போது அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கணக்காளராகவும் பணியாற்றிவந்தமை பொலிஸ் விசாரணையில்தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் : காதர் மஸ்தான்

யாழில் பெண்ணொருவரை தகாத முறைக்கு உட்படுத்திய கும்பல்: பொலிஸார் விசாரணை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version