மலேசியாவில்-லுமுட்டில் உள்ள ராயல் மலேசியன் நேவி (ஆர்எம்என்) தளத்தில் இன்று காலை இரண்டு மலேசிய ஆயுதப்படை ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதியதில் 10 கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை ஆர்எம்என் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
“இன்று காலை 9.32 மணியளவில் RMN லுமுட் தளத்தில் 90வது கடற்படை தின அணிவகுப்பு ஒத்திகையின் போது RMN கடல்சார் செயல்பாட்டு ஹெலிகொப்டர் (HOM-AW139) மற்றும் ஒரு Fennec ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது என்பதை RMN உறுதிப்படுத்துகிறது” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் வரலாற்றிலேயே இமாலய சாதனை படைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர்!
கோர விபத்து
“இந்த சம்பவத்தில் 7 RMN HOM குழு உறுப்பினர்கள் மற்றும் 3 RMN Fennec குழு உறுப்பினர்கள் அடங்கிய மொத்தம் 10 பணியாளர்கள் இருந்துள்ளனர்.
Ten people were killed after two helicopters collided in mid-air during a rehearsal for a parade at the Lumut naval base in the western state of Perak,
Malaysia 🇲🇾
▪︎ 23 April 2024 ▪︎#Malaysia #helicoptercrash pic.twitter.com/57IabEKejQ— DISASTER TRACKER (@DisasterTrackHQ) April 23, 2024
பாதிக்கப்பட்ட அனைவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டு, அடையாளம் காணும் செயல்முறைகளுக்காக Lumut RMN அடிப்படை இராணுவ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து ஹெலிகொப்டர்களில் ஒன்று, ஏழு பேருடன் ஓடு பாதையில் மோதியதாக நம்பப்படுகிறது. மற்றையது, பாதிக்கப்பட்ட மற்ற மூன்று பேருடன் அருகிலுள்ள நீச்சல் குளத்தில் மோதி விபத்துக்குள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
https://www.youtube.com/embed/zJQeBHmhoPI