Home இலங்கை அரசியல் ஹிருணிகாவுக்கு பிடியாணை

ஹிருணிகாவுக்கு பிடியாணை

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட சில சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(10) குறித்த பிடியாணையை பிறப்பித்துள்ளது. 

பிடியாணை

2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பான வழக்கு  இன்றையதினம் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால்  இவ்வாறு ஹிருணிகா உள்ளிட்டவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version