Home முக்கியச் செய்திகள் ரத்தன தேரர் மற்றும் துசித ஹல்லோலுவவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

ரத்தன தேரர் மற்றும் துசித ஹல்லோலுவவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் மற்றும் தேசிய லாட்டரி சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லோலுவ ஆகியோருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையின் கூற்றுப்படி, நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று(18) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவு

அத்துடன், துசித ஹல்லோலுவவுக்கு எதிரான பிடியாணை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவின் கோரிக்கையைத் தொடர்ந்து அந்தந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version