Home இலங்கை குற்றம் முல்லைத்தீவு காட்டினுள் மரையை வேட்டையாடிய சந்தேகநபர் கைது

முல்லைத்தீவு காட்டினுள் மரையை வேட்டையாடிய சந்தேகநபர் கைது

0

முல்லைத்தீவு (Mullaitivu)- புதுக்குடியிருப்பு காட்டினுள் அத்துமீறி உள்நுழைந்து பாரிய மரை
ஒன்றினை வெடி வைத்து இறைச்சியாக்கி கொண்டிருந்த ஒருவரை புதுக்குடியிருப்பு
வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

நேற்றையதினம் (07) புதுக்குடியிருப்பு மண்ணகண்டல் ஒதுக்க காட்டினுள் அத்து மீறி உள்
நுழைந்து கட்டு துவக்கால் உயிரினங்களை அச்சுறுத்தி மரை ஒன்றினை வெடி வைத்து
இறைச்சியாக்கும்போது புதுக்குடியிருப்பு பகுதி வன அதிகாரி தலைமயின் கீழ்,
விசேட அதிரடிப் படையினர் மற்றும் திணைக்களத்தினரால் சுற்றிவளைப்பு நடவடிக்கை
ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நீதிமன்றில் வழக்கு தாக்கல் 

புதுக்குடியிருப்பு முதலாம் வட்டாரத்தினை சேர்ந்த இளைஞர் இதன்போது கைது
செய்யப்பட்டதோடு மரை இறைச்சியும், மரையை சுடுவதற்கு பயன்படுத்திய கட்டு
துவக்கும் கைப்பற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேலதிக நடவடிக்கைகளுக்காக வன
ஜீவராசிகள் திணைக்களத்திடம் சந்தேகநபர் ஒப்படைக்கபட்டுள்ளார்.

இந்நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில்
வழக்கு தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை திணைக்களத்தினர் முன்னெடுத்து
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version