Home இலங்கை குற்றம் ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி

0

ருமேனியாவில் (Romenia) தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்றையதினம் (03.05.2024) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ருமேனியாவில் தொழில் பெற்றுக் கொள்வதற்காக குறித்த சந்தேக நபருக்கு பணம் வழங்கி ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் இருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

உடனடி விசாரணைகள்

அதனையடுத்து, சில நபர்களிடம் பணம் பெற்றுக் கொள்வதற்காக சந்தேக நபர், பத்தரமுல்லை தியத்த உயன பகுதிக்கு வர இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய உடனடியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, பத்தரமுல்லை தியத்த உயன அருகாமையில் இருந்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து நாட்டில் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களிடமிருந்து குறித்த சந்தேக நபர் 3 இலட்சம் முதல் 7 இலட்சம் ரூபா வரை பெற்றுள்ளார்.

அதன் பிரகாரம் சந்தேக நபர் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணம் மோசடி செய்துள்ளமை வெளிப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வெலிமடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் கொழும்பில் (Colombo) தங்கி இருந்து இந்த மோசடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள்

இதற்கு முன்னர் குறித்த சந்தேக நபர் ருமேனியாவில் வேலை செய்த நபர் என மேலதிக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த மோசடி வியாபாரத்துக்கு சந்தேக நபருக்கு உதவியாக இருந்த மேலுமொரு நபர் இனம் காணப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் தினங்களில் அவரும் கைதுசெய்யட இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை மாளிகாவத்தை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source: https://tamilwin.com/article/arrested-for-rumenia-vacancy-fraud-1714751463

NO COMMENTS

Exit mobile version