Home இலங்கை சமூகம் அறுகம் குடா சர்ச்சையின் பின்னணியில் இருக்கும் ஆப்கானிய முகவர்

அறுகம் குடா சர்ச்சையின் பின்னணியில் இருக்கும் ஆப்கானிய முகவர்

0

அறுகம் குடா மீது தாக்குதல் பின்னணயில் செயற்பட்ட ஆப்கானிஸ்தான் முகவர் ஒருவர் தொடர்பில் தகவல்கள் தெரியவந்துள்ளன.

அறுகம் குடா மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் குறித்த நபர் குறித்த தகவல்களை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறிது.

இந்த ஆப்கானிய முகவர் போதைப்பொருள் வியாபாரி என கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

பண பரிவர்த்தனைகள்

அறுகம்பே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மொஹமட் பிலான் இவருடன் பாரிய பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளார்.

இதன்படி, குறித்த பண பரிவர்த்தனையுடன் தொடர்புடைய போதைப்பொருட்கள் அனைத்தும் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை

இதேவேளை, அறுகம்பே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குழுவினர் அறுகம் குடா பிரதேசத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அவற்றை விற்பனை செய்துள்ளமையும் அம்பலமாகியுள்ளது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்கள் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/arugam-bay-attack-threat-investigation-updates-1730631441

NO COMMENTS

Exit mobile version