நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல்கள் தொடர்பிலான செயலமர்வில் கலந்துகொள்வதற்காக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
குறித்த செயலமர்வு, நேற்றையதினம் (19.20.2024) யாழ்ப்பாண மாவட்ட
அரசாங்க அதிபரும், தெரிவாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான, பாதுகாப்பு முன்னேற்பாடுகள்
மற்றும் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
தொடர்பாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
செயலமர்வு
இந்தச் செயலமர்வில் சிரேஷ்ட வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரி. சி. ஏ.
தனபால, பிரதிப் பொலிஸ்மா அதிபர் றுவான் குணசேகர, பிரதிப் பொலிஸ்மா
அதிபர் (கிளிநொச்சி) சமந்த டி. சில்வா, மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. சிறிமோகனன், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி. எல். ஏ.
சூர்யபண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் சிறுவர் – மகளிர்
துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் பிரியந்த வீரசூரியவால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.