Home இலங்கை அரசியல் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரமுகர் ஆட்பிணையில் விடுவிப்பு

மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரமுகர் ஆட்பிணையில் விடுவிப்பு

0

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து 3 கோடியே 28 இலட்சம் ரூபா
பெறுமதியான இரு ஆட்பிணையில் விடுவித்துள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (03.04.2025) அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து ஆட்பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மட்டக்களப்பை சேர்ந்த கனடா நாட்டிலுள்ள தனிநபர் ஒருவரிடம் வர்த்தக நடவடிக்கை ஒன்றை ஆரம்பிப்பதற்காக ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்ட
நிலையில், 3 கோடி 70 இலட்சம் ரூபா பணத்தை பெற்று தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்து மோசடி செய்துள்ளார்.

நீதிமன்றம் பிறப்பித்த குற்றச்சாட்டு

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் கொழும்பிலுள்ள நிதி மோசடி விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து நேற்று (02) கைது செய்யப்பட்டதுடன் இன்று (03) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து
3 கோடியே 28 இலச்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அவரை எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றில் மீண்டும் முன்னிலையாகுமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

https://www.youtube.com/embed/xc207ZzyPrE

NO COMMENTS

Exit mobile version