Home இலங்கை அரசியல் நெறிதவறும் பிக்குகளை நீக்க அதிகாரம் தேவை! அஸ்கிரிய பீடம் அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

நெறிதவறும் பிக்குகளை நீக்க அதிகாரம் தேவை! அஸ்கிரிய பீடம் அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

0

பௌத்த நெறிகளுக்கு முரணாக நடந்துகொள்ளும் பிக்குமாரின் துறவற நிலையை ரத்துச் செய்வதற்கான அதிகாரம் மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அஸ்கிரிய பீடம்,அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவை அமைச்சர்களான விஜித ஹேரத், கே.டி.லால்காந்த ஆகியோர் நேற்று மாலை அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.

வேண்டுகோள்

அதன்போதே இந்த வேண்டுகோள் அஸ்கிரிய பீடத்தின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

பௌத்த நெறிமுறைகளுக்கு முரணாக நடந்து கொள்ளும் பௌத்த பிக்குமாரை துறவற நிலையில் இருந்து நீக்கும் அதிகாரம் மன்னா் காலத்தில் சங்கராஜ என்ற அதிகாரம் கொண்ட தேரர் ஒருவருக்கு வழங்கப்பட்டிருந்தது. எனினும் மன்னராட்சி நீ்க்கத்தின் பின்னர் எந்தவொரு பிக்குவும் இதுவரை சங்கராஜ பதவிக்கு நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் சங்கராஜ பதவிக்குப் பதிலாக மகாநாயக்க தேரர்களுக்கு அவ்வாறான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கான பௌத்த விகாரை மற்றும் தேவாயலங்களுக்கான சிறப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றும் அஸ்கிரிய பீடத்தின் சார்பில் அமைச்சர்களான விஜித ஹேரத் மற்றும் கே.டி.லால்காந்த ஆகியோரிடம் ​வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version